களியக்காவிளை (09 ஜன 2020): கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு சோதனை சாவடியில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மர்ம நபர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு சோதனை சாவடியில் களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் பணியில் இருந்தார். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து வந்த ஒரு காரைச் சோதனை செய்ய தடுத்து நிறுத்தினார். காரில் இருந்து இறங்கிய மர்ம நபர், வில்சனை துப்பாக்கியால் பலமுறை சுட்டுள்ளார். இதில் உதவி ஆய்வாளர் வில்சன் தலை மார்பு மற்றும் கால் பகுதியில் குண்டு பாய்ந்து வில்சன் மயங்கி விழுந்துள்ளார்.
அருகில் இருந்த பிற காவலர்கள் குற்றவாளிகளைப் பிடிக்க வருவதற்குள் வந்த கும்பல் காரில் ஏறித் தப்பி ஓடி விட்டது.
படுகாயம் அடைந்த அடைந்த ஆய்வாளர் வில்சன், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்துள்ளார். இச் சம்பவத்தால் கன்னியாகுமரி முழுவதும் வாகன சோதனையில் குமரி மாவட்ட போலீஸார் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
தமிழக கேரள மாநில எல்லையில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.