கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் இருந்தவர் மரணம்!

Share this News:

நாகர்கோவில் (28 மார்ச் 2020): கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா இந்திய அளவில் நாளுக்கு நாள் அதிக அளவி பரவி வருகிறது. அதேபோல இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார். இறந்த நபருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பது குறித்த மருத்துவ அறிக்கை இன்னும் வரவில்லை என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 பேர் இறந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply