மத்திய அமைச்சரின் சுட்டுத் தள்ளுங்கள் (கோலி மாரோ) வாசகம் இன்றும் தொடரும் அவலம்!

புதுடெல்லி (29 பிப் 2020): மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் சுட்டுத் தள்ளுங்கள் என்ற சொல் இன்றும் வன்முறையாளர்களால் தொடரப்பட்டு வருகிறது. டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும் ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டது. இதில் 42 பேர் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ள்னர்.. பலியானவர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் அமைதி திரும்பியதாக போலீஸ்…

மேலும்...

கொடூரர்கள் இருக்கும் கட்சியில் இனி நான் இருக்கப்போவதில்லை – பிரபல நடிகை பாஜகவிலிருந்து விலகல்!

புதுடெல்லி (29 பிப் 2020): கொடூர சிந்தனை கொண்ட கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் போன்றவர்கள் இருக்கும் கட்சியில் தன்னால் இருக்க முடியாது எனக் கூறி பா.ஜ.க-விலிருந்து விலகியுள்ளார் மேற்கு வங்க நடிகையும் அரசியல்வாதியுமான சுபத்ரா முகர்ஜி. இவர் மேற்குவங்கத்தில் புகழ்பெற்ற டிவி சீரியல் நடிகையாக வலம் வருகிறார். பல்வேறு சீரியல்கள், விளம்பரங்கள் என நடித்து வந்த சுபத்ரா 2013-ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்துள்ளார். இந்நிலையில்தான் பா.ஜ.க-வின் போக்கு தற்போது மாறிவிட்டது எனக் காரணம் கூறி, அந்தக்…

மேலும்...

டெல்லி பேரணியில் பாஜக தலைவர் கபில் மிஸ்ரா பங்கேற்பு!

புதுடெல்லி (29 பிப் 2020): டெல்லி இனப்படுகொலைக்கு காரணமான பாஜக தலைவர் கபில் மிஸ்ரா (Delhi Peace Forum) சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்டுள்ளார். டெல்லியில் நடந்த இனப்படுகொலையில் இதுவரை 42 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 200-க்கும் மேற்பட்டோர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் டெல்லி அமைதி மன்றம் (Delhi Peace Forum) சார்பில் அமைதி பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பாஜக தலைவர் கபில் மிஸ்ராவும் கலந்து கொண்டார். பேரணியின்போது…

மேலும்...

பாஜக தலைவர்கள் மீது எப்போது வழக்கு பதிவு செய்வீர்கள்? முழு டெல்லியும் எரிந்த பிறகா?: நீதிபதி சரமாரி கேள்வி!

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரத்திற்கு முன்பு வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி வன்முறை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியான முரளிதரன் தலைமையிலான அமர்வில் இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்களின் பாதுகாப்பை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றோம். எனவே இந்த வழக்கில் தான் கேட்கும் அனைத்து…

மேலும்...

டெல்லி கலவரத்தை தூண்டிய பாஜக தலைவர் மீதான விசாரணையை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை

புதுடெல்லி (25 பிப் 2020): டெல்லி கலவரத்தை தூண்டியதாக பாஜக தலைவர் கபில் மிஸ்ரா மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் புதனன்று விசாரணைக்கு வருகிறது. டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸ் தலைமை காவலர் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில்…

மேலும்...

டெல்லி போராட்டக் காரர்களுக்கு பாஜக தலைவர் 3 நாட்கள் கெடு – போலீசுக்கும் எச்சரிக்கை!

புதுடெல்லி (23 பிப் 2020): டெல்லி ஜாஃப்ராபாத் போராட்டக் காரர்கள் மூன்று நாட்களில் கலைந்து செல்ல வேண்டும் என்று பாஜக தலைவர் கபில் மிஸ்ரா கெடு விதித்துள்ளார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் அரசும் கடுகளவும் இவ்விவகாரத்தில் பின் வாங்காமல் பிடிவாதமாகவே உள்ளது. இதனால் போராட்டங்கள் மேலும் தீவிரம் அடைந்துள்ளன. டெல்லி ஷஹீன் பாக்கை தொடர்ந்து நாடெங்கும் ஷஹீன் பாக் மாடல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் ஷஹீன் பாக் போலவே 1000…

மேலும்...