இஸ்லாமியர்களுக்கு எதிராக அவதூறு பரப்பிய கல்யாணராமனுக்கு சிறைத்தண்டனை – ஆனால் நடந்தது என்ன தெரியுமா?

சென்னை (09 மார்ச் 2023): இஸ்லாமியர்களைப் பற்றி அவதூறு பரப்பிய வழக்கில் 163 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமனை சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் கடந்த அக்டோபர் மாதம் நள்ளிரவில் கைது செய்தனர். பெண் பத்திரிகையாளர்கள், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் இஸ்லாமிய மற்றும் கிருத்துவ மக்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் அருவறுக்கத்தக்க கருத்துக்களை கல்யாணராமன் தொடர்ந்து பரப்பி வருவதாக, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞரும், விடுதலை சிறுத்தைகள்…

மேலும்...

பாஜக கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு!

சென்னை (26 அக் 2021): சமூக வலைத்தளங்களில் அருவருக்கத் தக்கவகையில் எழுதிவரும் பாஜகவை சேர்ந்த கல்யாணராமனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் நபிகள் நாயகம் பற்றி அவதூறாகப் பேசிய புகாரின் பேரில் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார் இது இப்படியிருக்க, கடந்த சில வாரங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் குறித்து பாஜக பிரமுகரான கல்யாணராமன்…

மேலும்...

கல்யாணராமன் மீது நடவடிக்கை – போலீஸில் புகார் அளித்த விசிக!

சென்னை (07 ஜூலை 2021): தொல். திருமாவளவன் குறித்து அவதூறு பரப்பி வரும் பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, சென்னை கமிஷனர் ஆபீசில் விசிக சார்பில் புகார் தரப்பட்டுள்ளது. பாஜக கட்சியில் கல்யாணராமன் என்பவர், தொடர்ந்து வன்முறையைத் தூண்டி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசி, ஊடக வெளிச்சத்தில் எப்போதும் தன் பெயர் இருக்கும்படி சர்ச்சை செய்து வருபவர். சில மாதங்களுக்கு முன்பு, மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து தரக்குறைவாகப்…

மேலும்...

கல்யாணராமனுக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை – பாஜக தலைவர் பகீர் தகவல்!

சென்னை (02 மே 2020): கல்யாணராமனுக்கும் பாஜகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் தெரிவித்துள்ளார். அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் பேசி வருபவர் கல்யாணராமன். அவர் தன்னை பாஜகவில் பொறுப்பில் உள்ளதாகவே காட்டிக் கொள்வார். இந்நிலையில் இன்று பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.எஸ். நரேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,” கல்யாணராமன் பாஜகவின் எந்தவித பொறுப்பிலும் இல்லை. அவர் சமூக வலைதளங்களில் கூறும் கருத்துக்களுக்கும் பாஜகவுக்கும்…

மேலும்...