சென்னை (02 மே 2020): கல்யாணராமனுக்கும் பாஜகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் பேசி வருபவர் கல்யாணராமன். அவர் தன்னை பாஜகவில் பொறுப்பில் உள்ளதாகவே காட்டிக் கொள்வார்.
இந்நிலையில் இன்று பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.எஸ். நரேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,” கல்யாணராமன் பாஜகவின் எந்தவித பொறுப்பிலும் இல்லை. அவர் சமூக வலைதளங்களில் கூறும் கருத்துக்களுக்கும் பாஜகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அது அவரது தனிப்பட்ட கருத்தாகும்” என்று தெரிவித்துள்ளார்.