
பாட புத்தகங்களோடு நல்லடக்கம் செய்யப்பட்ட ஸ்ரீமதியின் உடல்!
கள்ளக்குறிச்சி (23 ஜூலை 2022): மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பாட புத்தகங்களுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது காண்போரை கண் கலங்க வைத்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த 13ம் தேதி மரணமடைந்தார். மாணவி மரணத்தில் மர்மம் இருந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டு உத்தரவால் மாணவியின் உடல் மறுகூறாய்வு செய்யப்பட்டது….