ஏன் இவ்வளவு அவசரப் படுகிறார்கள் – ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை!
சென்னை (12 அக் 2020): திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்த நினைப்பவர்கள் எண்ணம் நிறைவேறாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பக்குவப்பட்ட புரிந்துணர்வோடும், பண்பட்ட நேச மனப்பான்மையோடும், தி.மு.கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெகுமக்களின் ஏகோபித்த ஆதரவுடன், 2021 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. தி.மு.கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்குள்ளே, ஏதாவது திருகு தாளங்களைச் செய்து, தூய சுமூகமான உறவு நிலையைக்…