ஹஜ் யாத்திரை குறித்து ஒன்றிய அமைச்சர் விளக்கம்!

புதுடெல்லி (06 ஜூன் 2021): இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஒன்றிய சிறுபான்மை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, சவூதி அரேபியா கடந்த ஆண்டு இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வரும் ஹஜ் யாத்ரீகர்களை தடை செய்தது. இந்த ஆண்டும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், புதிய வகை கொரோனா குறித்து கவலைகள் எழுப்பப்படுவதாலும் இந்த முறை…

மேலும்...

கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர் கோவிட் பாதித்தவர்கள் நிலை – மருத்துவ நிபுணர்கள் முக்கிய தகவல்!

புதுடெல்லி (06 ஜூன் 2021): கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர் கோவிட் பாதிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்தும் மரணம் ஏற்படுகின்றதா? என்பது குறித்தும் எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். அதன்படி, இதுதொடர்பாக எய்ம்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ஆய்வில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனா வந்த 36 நோயாளிகளும், ஒரு டோஸ் போட்டு தொற்று பாதிப்புக்குள்ளான 27 பேரும் என 63 பேர் உட்படுத்தப்பட்டனர். இதில் 10 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும்…

மேலும்...

ரெயிலில் திருச்சி வந்த ஆக்சிஜன் – மூன்றாம் அலையையும் சமாளிப்போம்: அமைச்சர் கே.என். நேரு!

திருச்சி (05 ஜூன் 2021); சிக்ஜில் என்ற நிறுவனத்திடமிருந்து தமிழ்நாடு அரசு வாங்கியுள்ள 80 டன் ஆக்சிஜன், இன்று (05.06.2021) ரயில் மூலம் திருச்சி வந்து சேர்ந்தது. இதில் 16 டன் தாங்கக்கூடிய லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றுவருகிறது. இதனைப் பார்வையிட்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, “தமிழ்நாட்டில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது இல்லை. இருப்பினும் கையிருப்பு வைத்துக்கொள்வதற்காக இவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்றாவது அலை வந்தாலும் அதை…

மேலும்...

தமிழ் நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14-வரை நீட்டிப்பு!

சென்னை (05 ஜூன் 2021): தமிழ் நாட்டில் தளர்வுகளுடனான லாக்டவுன் ஜூன் 14-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் ஓரளவுக்கு சரிந்து வரும் நிலையில், அரசு அலுவலகங்கள் 30% பணியாளர்களுடன் செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது . ஜூன் 7 முதல் மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி. ஜூன் 14 வரை அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக், சலூன்கள், தேநீர் கடைகள்…

மேலும்...

பாகிஸ்தான் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி!

இஸ்லாமாபாத் (02 மே 2021): பாகிஸ்தானில் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிக்கு பாக்வாக் என் பெயரிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சீனா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசிநேற்று (01.06.2021) அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகம் – இந்தியா பயணத் தடை மேலும் நீட்டிப்பு!

துபாய் (30 மே 2021): இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்காண பயண தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது . இது ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சுற்றறிக்கை சம்பந்தப்பட்ட பயண முகவர் நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாவது அலையை தொடர்ந்து ஏப்ரல் 25 முதல் இந்தியாவில் இருந்து பயணிகள் விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்தது. இந்நிலையில் இந்தியாவில் கோவிட் விகிதங்கள் வீழ்ச்சியடைந்து வருவதால் ஐக்கிய அரபு அமீரகம் தனது…

மேலும்...

ஆற்றில் வீசப்பட்ட கொரோனவால் உயிரிழந்த உடல்!

லக்னோ (30 மே 2021): உத்திர பிரதேசம் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் ஆற்றில் வீசப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோவில் பாதுகாப்பு உடை அணிந்த இரண்டு ஆண்கள், ராப்தி ஆற்றில் இறந்த உடனை வீசுவது தெளிவாக உள்ளது அந்த உடல் கொரோனாவால் உயிரிழந்தவருடையது என்பதை பால்ராம்பூரின் தலைமை மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே உத்திர பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்த ஆயிரக்கணக்கான உடல்கள் கங்கையில்…

மேலும்...

நான் குறைகுடமல்ல நிறைகுடம் – பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சரமாரி பதில்!

சென்னை (30 மே 2021): ஜிஎஸ்டி குறித்த கோவா பாஜக அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சரமாரி பதிலடி கொடுத்துள்ளார். கொரோனா மருந்து மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க கோவா அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பேசியிருந்தார். ஆனால் கோவாவின் போக்குவரத்து துறை அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கோவாவிற்கு எதிராக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பிடிஆர்…

மேலும்...

கொரோனா நோயாளிகள் அருகில் சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின் – நெகிழ்ந்த நோயாளிகள்!

(30 மே 2021): கோவையில் பிபிஇ கிட் அணிந்து கொரோனா நோயாளிகளின் அருகில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இன்று கொரோனா தடுப்பு பணிகளை முதல்வர் ஸ்டாலின் கண்காணித்தார். கோவையில் கொரோனா தடுப்பு பணிகள் எப்படி நடக்கின்றன, லாக்டவுன் கட்டுப்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று நேரடியாக ஆய்வு செய்தார். அதன் ஒரு கட்டமாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நோயாளிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார். இதில் நோயாளிகளிடம் அருகில் சென்ற…

மேலும்...

இந்தியாவுக்கு மீண்டும் ஆக்ஸிஜன் கொள்கலன்களை வழங்கிய சவூதி அரேபியா!

புதுடெல்லி (30 மே 2021): இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க சவூதி அரேபியா இந்தியாவுக்கு தற்போது மீண்டும் உதவிகளை வாரி வழங்கியுள்ளது. கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் காரணமாக இந்தியா, ஈடு செய்ய முடியாத அளவுக்கு மனித உயிர்களையும், பொருளாதார வீழ்ச்சியினையும் சந்தித்து வருகின்றது. இந்தியாவுக்கு உலக நாடுகள் பலவும் கொரோனா நிவாரண பொருட்களையும் உதவிகளையும் வாரி வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஏற்கனவே இந்தியாவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் என பலவற்றையும் அனுப்பிய சவுதி…

மேலும்...