சென்னை (05 ஜூன் 2021): தமிழ் நாட்டில் தளர்வுகளுடனான லாக்டவுன் ஜூன் 14-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் ஓரளவுக்கு சரிந்து வரும் நிலையில், அரசு அலுவலகங்கள் 30% பணியாளர்களுடன் செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது .
ஜூன் 7 முதல் மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
ஜூன் 14 வரை அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக், சலூன்கள், தேநீர் கடைகள் திறக்க அனுமதி இல்லை.