தமிழகத்தில் கொரோனா பரவல் – தலைமை செயலாளர் பரபரப்பு அறிக்கை!

சென்னை (03 ஏப் 2021): கொரோனா நோய் தொற்று பரவலை கண்காணித்து தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார். “இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் கொரோனாநோய்த் தொற்று அதிகரித்துவரும் சூழல் காணப்படுகிறது. குறிப்பாக மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இந்த தொற்று அதிவேகமாகவும், பன்மடங்கும் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், அதேவேளையில் பஞ்சாப், கர்நாடகா, சதிஷ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், டெல்லி மற்றும் தமிழ்நாட்டிலும் நாள் ஒன்றுக்கு நோய்த் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை…

மேலும்...

திமுக எம்பி கனிமொழி மருத்துவமனையில் அனுமதி!

சென்னை (03 ஏப் 2021): திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி ஈடுபட்டு இருந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து கனிமொழி, வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

மேலும்...

திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா பாசிட்டிவ்!

சென்னை (03 ஏப் 2021): திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி ஈடுபட்டு இருந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து கனிமொழி, வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் சமூகத்தில் அனைத்து தரப்பினரும்…

மேலும்...

ஸ்டாலின் ராகுல் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் கொரோனாவால் மரணம்!

சேலம் (02 ஏப் 2021): சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயபிரகாஷ் கொரானா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 4 நாட்களாக, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். முன்னதாக சேலத்தில் கடந்த வாரம் திமுக தலைவர் ஸ்டாலின், ராகுல் காந்தி, மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் ஜெயபிரகாஷும்…

மேலும்...

பாலஸ்தீன் காஸாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு!

காஸா (31 மார்ச் 2021): காஸாவில் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு இது அதிக அளவிலானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 முதல் ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்படுத்தப்பட்ட கடலோர பாலஸ்தீனிய “காசா பகுதியில் இது அதிகமாக உள்ளதாக காசா சுகாதார அமைச்சகத்தின் பராமரிப்பு துணை இயக்குனர் மேகி தாஹிர் கூறினார் காசாவில், 65,500 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும்…

மேலும்...

ஊரடங்கு அறிவிப்பு வெளியாகுமா? – சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!

சென்னை (30 மார்ச் 2021): ஊரடங்கு அறிவிப்பு வெளியாகலாம் என்று பரவும் தகவல் குறித்து காதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது. சூழலை கண்காணித்து சூழலுக்கு ஏற்றபடி முடிவு எடுக்கப்படும். வரக்கூடிய நாட்களில் சில கட்டுபாடுகள் இருக்கும். முழு ஊரடங்கு வரப்போகிறது, இரவு நேர ஊரடங்கு வரப்போகிறது என்கிற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்.” என கூறினார்.

மேலும்...

புனித ரமலானில் மக்கா மற்றும் மதினா பெரிய மசூதிகளில் விதிக்கப்பட்டுள்ள கோவிட் கட்டுப்பாடுகள்!

ஜித்தா (29 மார்ச் 2021): உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தொடர்வதால் இவ்வருட ரமலானில் புனித மக்கா மற்றும் மதினாவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இரண்டு புனித மசூதிகளின் தலைமை இமாம் ஷேக் அப்துல் ரஹ்மான் அல்-சுதாய்ஸ் ஞாயிற்றுக்கிழமை இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இப்தார் (நோன்பு திறப்புக்காக) விரிப்பு விரித்து ஒன்றாக நோன்பு திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. , இஃதிகாஃப் (வழிபாட்டுக்காக ஒரு மசூதியில் தங்கியிருக்கும் நடைமுறை) இரு மசூதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு…

மேலும்...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா – கட்டுப்படுத்த 5 அம்ச திட்டம்!

புதுடெல்லி (28 மார்ச் 2021): இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இந்த மாதம் முதல் மீண்டும் தலைவிரித்தாடுகிறது. நேற்று ஒரே நாளில் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேகமாக பரவி வருகிற கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக மத்திய அரசு நேற்று காணொலி காட்சி வழியாக உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர்…

மேலும்...

சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாசிட்டிவ் – ரசிகர்கள் கவலை!

மும்பை (27 மார்ச் 2021): கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெண்டுல்கர் கூறியதாவது:- சிறிய அறிகுறிகளுடன் கொரோனா இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நான் வீட்டில் தனிமையில் உள்ளேன். எனது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா இல்லை. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டு…

மேலும்...

இந்தியாவில் 60 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (26 மார்ச் 2021): இந்தியாவில் கட்டுக்குள் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, இந்த மாதத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. , மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,18,46,652 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 257 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை…

மேலும்...