சேலம் (02 ஏப் 2021): சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயபிரகாஷ் கொரானா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 4 நாட்களாக, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
முன்னதாக சேலத்தில் கடந்த வாரம் திமுக தலைவர் ஸ்டாலின், ராகுல் காந்தி, மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் ஜெயபிரகாஷும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.