
இங்கிலாந்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா- மூன்றடுக்கு ஊரடங்கு உத்தரவு!
லண்டன் (14 அக் 2020): இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் மூன்றடுக்கு ஊரடங்கிற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். இங்கிலாந்தின் வடக்கில் கொரோனா தொற்று பரவல் மிகவேகமாக பரவி வருகின்றது. வரவிருக்கும் வாரங்களில் இறப்புக்கள் அதிகரிக்கும் என்றும், கடந்த மாத தொடக்கத்திலிருந்து தொற்று பரவல் வேகம் அதிகரித்து வருகின்றது என்றும், துணை தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஜொனாதன் வான்-டாம் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய புள்ளிவிவரங்கள் இளையவர்களிடையே வைரஸ் விரைவாக…