தலைமைச் செயலருடன் முஸ்லிம் தலைவர்கள் பேசியது என்ன? – ஜவாஹிருல்லா விளக்கம்!
சென்னை (14 மார்ச் 2020): தமிழக தலைமை செயலருடன் முஸ்லிம் தலைவர்கள் சந்தித்து பேசியது குறித்து மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று(சனிக்கிழமை) மாலை சிஏஏ, என்.ஆர்.சி குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, “தமிழக தலைமை செயலர் முஸ்லிம் தலைவர்களுடன் சந்தித்து பேச அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி நாங்கள் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக சந்தித்துப் பேசினோம், அப்போது கோரிக்கைகளை…