தமிழக முஸ்லிம் உலமாக்கள் நடிகர் ரஜினியுடன் சந்திப்பு!

Share this News:

சென்னை (01 மார்ச் 2020): தமிழ்நாடு முஸ்லிம் உலமாக்கள் நடிகர் ரஜினியை சந்தித்து பேசியுள்ளனர்.

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நாடெங்கும் வலுத்துள்ளது. மேலும் மத்திய பாஜக அரசுடன் நெருங்கிய நட்பு வைத்திருக்கும் ரஜினி, வெளியில் பாஜகவுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறி வருகிறார். ஆனால் தமிழகம் வரும் பாஜக தலைவர்கல் நிகழ்ச்சிகளில் எல்லாவற்றிலும் ரஜினி கலந்து கொள்வார்.

இதுவல்லாமல் பாஜக அரசின் அனைத்து திட்டங்களையும் ஆதரித்து கருத்து தெரிவித்து வருபவர் ரஜினி. குறிப்பாக சிஏஏவுக்கும் மிகுந்த ஆதரவை ரஜினி அளித்து வருகிறார்.

இந்நிலையில் சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை கே.எம்.பாக்கவி தலைமையில், முஸ்லிம் உலமாக்கள் சந்தித்து ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினர். அப்போது, குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து அதிருப்தியளிப்பதாக இஸ்லாமிய மதகுருமார்கள் கூறிய நிலையில், அவரை சந்தித்து அதன் பாதிப்புகள் குறித்து விளக்கமளித்ததனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் கே.எம்.பக்வி கூறுகையில்,

எங்கள் தூதுக்குழு ரஜினிகாந்தை சந்தித்து என்பிஆர் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதித்தது. அப்போது என்பிஆர் காரணமாக முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நாங்கள் விளக்கினோம். அவர் எங்கள் கருத்தை புரிந்து கொண்டார். இதனால் முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை அகற்ற தேவையான அனைத்தையும் செய்து தருவதாக உறுதியளித்தார் என்று தெரிவித்தார்.

முன்னதாக, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு இருப்பதாக நடிகா் ரஜினிகாந்தை சனிக்கிழமை சந்தித்து தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவா் அபுபக்கா் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply