அமெரிக்க அதிபரை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி!

Share this News:

சென்னை (23 பிப் 2020): இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது மனைவியுடன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார். இந்தச் சுற்றுப்பயணத்தின்போது ட்ரம்ப்புக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

ட்ரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் ட்ரம்ப் விருந்தில் கலந்துகொள்வதற்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply