Rahul and Modi

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை – வழக்கு தள்ளுபடியாகுமா?

சூரத் (23 மார்ச் 2023): கடந்த 2019ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, கர்நாடகா மாநிலம் கோலாரில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சாதி பெயர் குறித்து பேசியது பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதனை இன்று விசாரித்த சூரத் மாவட்ட நீதிபதி வர்மா, ராகுல் காந்தி குற்றவாளி தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து…

மேலும்...

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை!

புதுச்சேரி (02 பிப் 2023): புதுச்சேரியில் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று புதுச்சேரி புதுச்சேரி அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டும் சிறார்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ .25 ஆயிரம் அபராதம் – விதிக்கப்டும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சமீப காலமாக அதிகரிக்கும் விபத்துக்களுக்கு சிறார்கள் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

சவூதியில் கார் விபத்து வழக்கில் ஒன்பது ஆண்டு சிறையில் இருந்த இந்தியர் விடுதலை!

ஜிசான் (23 ஜன 2023): கார் விபத்து வழக்கில் ஒன்பது ஆண்டுகள் சவூதி சிறையில் இருந்த இந்தியர் அத்தாவுல்லா ஹக்கீமுல்லா விடுதலை செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசத்தை சேர்ந்த அத்தாவுல்லா ஹக்கீமுல்லா ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு கார் ஓட்டிச் சென்றபோது கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் இறந்த நபரின் குடும்பத்திற்காக சவுதி அரசு இழப்பீடு வழங்கியதை அடுத்து அத்தாவுல்லா ஹக்கீமுல்லா விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜிசான் சிறையிலிருந்து விடுதலையான இவர் அபஹா விமான நிலையத்திலிருந்து ஏர்…

மேலும்...

சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 25 பேர் பலி – 40 பேர் தப்பியோட்டம்!

ஹைதி (27 பிப் 2021): ஹைதி நாட்டில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 400க்கும் அதிகமானோர் தப்பியோடியுள்ளனர். ஹைதி நாட்டின் தலைநகரான போர்ட்-அவ்-ப்ரிண்சின் வடகிழக்கு பகுதியில் க்ரோஸ்-டிஸ்-பவ்க்யூட்ஸ் சிவில் சிறைச்சாலை உள்ளது. அந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அந்த சிறைச்சாலையில் கடந்த வியாழக்கிழமை திடீரென கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் கைதிகளுக்கும் சிறைக்காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளபட்டபோதும்…

மேலும்...

துன்புறுத்தப்படும் பத்திரிகையாளர்களும் பாஜக ஆட்சியும்!

புதுடெல்லி (26 டிச 2020) பாஜக ஆட்சி புரியும் மாநிலங்களில் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பாக இல்லை என்பதை ‘தி வயர்’ இன்று வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை காட்டுகிறது. இதுகுறித்த அந்த அறிக்கையின்படி, நாட்டில் கொரோனா காலங்களில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 55 பத்திரிகையாளர்கள் 2020 மார்ச் 25 முதல் மே 31 வரை கைது செய்யப்பட்டனர். பல ஊடக ஊழியர்கள் உடல் ரீதியாக தாக்கப்பட்டனர். சொத்துக்கள் , வாகனங்கள் மற்றும் கேமராக்கள் அழிக்கப்பட்டன. இந்த காலகட்டத்தில், சித்திக் கப்பன்…

மேலும்...

சிறையில் பிரபல நடிகைகள் கதறல்

பெங்களூரு (29 செப் 2020): போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகைகள் ஜாமீன் கிடைக்காததால் கதறி அழுதுள்ளனர். கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக்குள் கைதிகளுக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிதாக கைதாகும் நபர்களை, சிறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெண்களுக்கான அறைகளில் தங்க வைப்பதே வழக்கம். அங்கு 14 நாட்கள் தனிமை முடிந்த பின்பு தான் மற்ற…

மேலும்...

13 வயது மகளை வன்புணர்ந்த தந்தைக்கு ஐந்து ஆண்டு சிறை!

ஐதராபாத் (20 ஜன 2020): 13 வயது வளார்ப்பு மகளை வன்புணர்ந்த தந்தைக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு 48 வயது ரமேஷ் என்பவர் அவர் தத்தெடுத்த 13 வயது மகளை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வன்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து வீட்டுக்கு வந்த தாயிடம் சிறுமி கூறியதை அடுத்து தாய் போலீசில் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த…

மேலும்...