ஐதராபாத் (20 ஜன 2020): 13 வயது வளார்ப்பு மகளை வன்புணர்ந்த தந்தைக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு 48 வயது ரமேஷ் என்பவர் அவர் தத்தெடுத்த 13 வயது மகளை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வன்புணர்வு செய்துள்ளார்.
இதுகுறித்து வீட்டுக்கு வந்த தாயிடம் சிறுமி கூறியதை அடுத்து தாய் போலீசில் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மாவட்ட நீதிமன்றம் ரமேஷுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்துள்ளது.