சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகல்!
சென்னை (24 மார்ச் 2022): சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியிலிருந்து தோனி விளக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைமறுதினம் ஐ.பி.எல். 2022 சீசன் தொடங்குகிறது. இந்த நிலையில், இன்று தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார். தோனி கேப்டன் பதவியில் இருந்த விலகினாலும் வீரராக அணியில் இடம் பிடித்து விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.