ஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு!

Share this News:

துபாய் (28 ஆக 2020): ஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர் ஒருவர் உட்பட 13 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அதற்காக எட்டு ஐபிஎல் அணிகளும் இந்தியாவில் இருந்து கிளம்பி துபாய் மற்றும் அபுதாபியில் முகாமிட்டுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் துபாயில் ஒரு ஹோட்டலில் முகாமிட்டுள்ளது.

இந்நிலையில் அதிர்ச்சி தரும் செய்தியாக சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவருக்கும் ஏற்கெனவே மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில்,இன்று நான்காவது முறையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், அணியின் வேகபந்து வீச்சாளர் ஒருவருக்கும், அணி நிர்வாகிகளுக்கும் என மொத்தம் 13 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிஎஸ்கே அணி வீரர்களுக்கான தனிமைப்படுத்தல் முகாம் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக அணி நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply