முகத்தில் அறையும் உண்மை – புத்தக திறனாய்வு!
Mothering a Muslim – Nasia Erum ’ஒரு முஸ்லீமின் தாயாக இருத்தல்” எனும் பொருள்படும் நஸியா எருமின் இப்புத்தகம், அவர் 2014ல் தாயான போது ஏற்பட்ட அச்சத்தை கருவாக கொண்ட நூலாகும். இன்றைய சூழலில் அதிகம் பேசப்படாதொரு விசயத்தைக் கையிலெடுத்து மிகுந்த கவனத்துடன் கையாண்டுள்ளார் நஸியா. இந்தியாவில் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ள அடிப்படைவாத முஸ்லீமாக இல்லாமல் மைய நீரோட்டத்தில், பொதுவான சூழலில் தன் குழந்தை வளர வேண்டும் என்று நினைக்கும் சமூகத்தின் மேலடுக்கில் உள்ள முஸ்லீமான நஸியா…