சவூதி அரேபியாவில் ஓடும் பயணிகள் பேருந்து தீ விபத்து!

ரியாத் (07 ஜன 2023): சவுதி அரேபியாவில் ரியாத் அருகே ஓடும் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது. தீ பிடித்த பேருந்து தனியாருக்கு சொந்தமானது. ரியாத்தில் இருந்து 500 கிமீ தொலைவில் உள்ள அஃபிஃப்-தாரா ஈயா சாலையில் வியாழக்கிழமை இரவு 40 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது பஸ்சின் பின்பக்க டயர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. எனினும் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது….

மேலும்...

ஜித்தா சிட்டி பார்க் ஃபெஸ்டிவல் பூங்காவில் தீ விபத்து!

ஜித்தா (30 டிச 2022): ஜித்தா பாலஸ்தீன சாலையில் உள்ள சிட்டி பார்க் ஃபெஸ்டிவல் சிட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த பூங்காவில் வெள்ளிக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டது. மின்சார பொம்மைகள், ஆயத்த ஆடைகள் மற்றும் பிற பொருட்களை விற்கும் ஸ்டால்கள் தீயில் கருகின. இந்த தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. மேலும் பூங்கா மற்றும் அருகில் உள்ள கிடங்குகளுக்கு தீ பரவும் முன் குடிமைத் தற்காப்பு படையினர் தீயை அணைத்தனர்.

மேலும்...

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ – டெல்லியில் பரபரப்பு -VIDEO

புதுடெல்லி (29 அக் 2022): டெல்லியில் இருந்து பெங்களூரு பறக்கவிருந்த இன்டிகோ விமானத்தில் தீப்பொறி பறந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் இருந்து பெங்களூரு செல்லும் 6E-2131 இன்டிகோ விமானம் நேற்று இரவு டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. பறக்க தயாராக இருந்த விமானம் ஓடுபாதைக்கு 9.40 மணி அளவிற்கு வந்துள்ளது. 9.45 மணி அளவில் டேக் ஆப் ஆவதற்கு முழுவேகத்தில் சென்றபோது வலப்பக்க இருக்கைக்கு அருகே எஞ்சினில் திடீரென தீப்பற்றியது. டேக்…

மேலும்...

மஸ்கட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீர் தீ விபத்து!

மஸ்கட் (14 செப் 2022): மஸ்கட்டில் ஏர்ந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென தீ பற்றியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மஸ்கட்-கொச்சி இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இன்று பிற்பகல் மஸ்கட் விமான நிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பயணிகள் விமானத்தில் ஏறி புறப்படும்போது இறக்கையில் இருந்து புகை கிளம்பியது. அவசர கதவு வழியாக பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேலும்...

பட்டாசுக்கடையில் திடீர் தீ – 4 பேர் உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி (26 அக் 2021): கள்ளக்குறிச்சி அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் இன்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீ விபத்தில் சிக்கி…

மேலும்...

துபாய் ஜபல் அலி துறைமுக கப்பலில் பயங்கர சத்தத்துடன் தீ விபத்து!

துபாய் (08 ஜுலை 2021): துபாயின் ஜெபல் அலி துறைமுகத்தில் புதன்கிழமை இரவு ஒரு கப்பலில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துபாய் அரசு அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரல் மோனா அல் மர்ரி கூறுகையில், விபத்து ஏற்பட்ட கப்பலில் அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் . தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. என்றார். துபாயின் பல பகுதிகளில் வசிப்பவர்கள் மாலையில் துறைமுகத்திலிருந்து பயங்கர சத்தம் கேட்டதாக தெரிவித்தனர்,. இந்த…

மேலும்...

புனே கொரோனா தடுப்பூசி தயாரிப்பு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

புனே (21 ஜன 2021): நாட்டின் முன்னணி கோவிட் தடுப்பூசி உற்பத்தி மையமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புனே சீரம் நிறுவனத்தில் டெர்மினல் ஒன் அருகே மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. தீயணைப்பு படையின் பத்து பிரிவுகள் சம்பவ இடத்தை அடைந்துள்ளன. கோவிட் தடுப்பூசி உற்பத்தி ஆலை தீ விபத்து இல்லை என்று நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் உயிர் சேதம் எதுவும்…

மேலும்...

கொரோனா சிகிச்சை மையத்தில் திடீர் தீ விபத்து – 5 நோயாளிகள் பலி!

ராஜ்கோட் (27 நவ 2020): குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5பேர் பரிதாபாமாக உயிரிழந்துள்ளனர். குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள உதய் சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்றிரவு இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம்…

மேலும்...

கப்பல் தீ விபத்தால் இலங்கைக்கு ஆபத்து!

கொழும்பு (04 செப் 2020): சரக்கு கப்பலில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் இலங்கைக்க்கு பேராபத்து காத்திருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குவைத்தின் மினா அல் அஹ்மாதி துறைமுகத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி புறப்பட்ட சரக்கு கப்பல், இந்தியாவின் பாரதீப் துறைமுகத்தை செப்டம்பர் 5 ஆம் தேதி அடையும் இலக்குடன் பயணம் மேற்கொண்டிருந்தது. இலங்கையின் கிழக்கு கடல் பகுதியில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் கப்பல் வந்து கொண்டிருந்தபோது அதில் தீ பற்றி…

மேலும்...

தீ விபத்தில் நான்கு உயிர்களை காப்பற்றிவிட்டு உயிரிழந்த உஸ்மா பாத்திமா!

ஐதராபாத் (23 ஆக 2020): தெலுங்கானாவில் ஸ்ரீ சைலம் நீர் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு உயிர்களை காப்பாற்றி விட்டு உயிரிழந்துள்ளார் உஸ்மா பாத்திமா என்ற பொறியாளர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாதிலிருந்து, 200 கிலோ மீட்டர் தொலைவில்,ஆந்திர எல்லையை ஒட்டி, கிருஷ்ணா ஆற்றின் மீது, ஸ்ரீசைலம் நீர் மின் உற்பத்தி திட்டம் அமைந்துள்ளது.இந்த நீர் மின் நிலையத்தை, தெலுங்கானா மாநில மின் உற்பத்திக் கழகம் நடத்தி வருகிறது. இங்கு கடந்த 19 ஆம் தேதி…

மேலும்...