புனே (21 ஜன 2021): நாட்டின் முன்னணி கோவிட் தடுப்பூசி உற்பத்தி மையமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
புனே சீரம் நிறுவனத்தில் டெர்மினல் ஒன் அருகே மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. தீயணைப்பு படையின் பத்து பிரிவுகள் சம்பவ இடத்தை அடைந்துள்ளன.
கோவிட் தடுப்பூசி உற்பத்தி ஆலை தீ விபத்து இல்லை என்று நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் உயிர் சேதம் எதுவும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். தீ விபத்தில் யாரும் சிக்கவில்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டுமானத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தொழிற்சாலை இந்தியாவில் 30 மில்லியன் சுகாதார ஊழியர்கள் மற்றும் பிற கோவிட் போராளிகளுக்கு தடுப்பூசிகளை உற்பத்தி செய்கிறது.