துபாய் (08 ஜுலை 2021): துபாயின் ஜெபல் அலி துறைமுகத்தில் புதன்கிழமை இரவு ஒரு கப்பலில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
துபாய் அரசு அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரல் மோனா அல் மர்ரி கூறுகையில், விபத்து ஏற்பட்ட கப்பலில் அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் . தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. என்றார்.
துபாயின் பல பகுதிகளில் வசிப்பவர்கள் மாலையில் துறைமுகத்திலிருந்து பயங்கர சத்தம் கேட்டதாக தெரிவித்தனர்,.
இந்த விபத்தினால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று துபாய் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.