காயல்பட்டினம் மக்கள் அடித்த ரிவீட்டு – அதிராம்பட்டினம் மக்களுக்கு ட்ரீட்டு!

அதிராம்பட்டினம் (24 ஜன 2020): காயல்பட்டினம் மக்கள் ஒட்டுமொத்தமாக வங்கிக் கணக்கை முடித்துக் கொள்வதாக அறிவித்த நிலையில் அதிராம்பட்டினம் தனியார் வங்கி வெளிநாடு வாழ் அதிரையர்களுக்கு விருந்து வைத்து உபரசிக்க அழைப்பு விடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைமை அலுவலகம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரத்தில் பணம் எடுப்பதற்கோ, பணம் செலுத்துவதற்கோ, சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களாக…

மேலும்...

மக்கள் தொகை பதிவேட்டில் பெற்றோர் பிறந்த தேதி, பிறந்த ஊர் அவசியமில்லை: மத்திய அரசு!

புதுடெல்லி: தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பெற்றோர் பிறந்த தேதி, பிறந்த ஊர் போன்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பது கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.. நாடு முழுவதும், 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்புடன் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) புதுப்பிக்கும் பணி வரும் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ம் தேதி வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்வது தொடர்பான மத்திய…

மேலும்...

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கடினமான கேள்விகள் இருக்க வாய்ப்பு!

புதுடெல்லி (17 ஜன 2020): மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கடினமான கேள்விகள் கேட்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் வீடுகள்தோறும் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் 31 கேள்விகளை கேட்குமாறு மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. செல்லிடப்பேசி எண் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்புடைய தகவல்கள் பரிமாற்றத்துக்கு மட்டுமே கேட்கப்படவுள்ளன. தொலைபேசி இணைப்பு, காா், இருசக்கர வாகனங்கள், மிதிவண்டி, செல்லிடப்பேசி, தொலைக்காட்சி, மடிக்கணினி…

மேலும்...

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை!

திருவனந்தபுரம் (16 ஜன 2020): கேரளாவில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR) எடுக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க மக்கள் கொந்தளித்துள்ள நிலையில் கேரள அரசு ஒரு படிமேலே போய் சட்டமன்றத்தில் இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து ஒட்டு மொத்த இந்தியாவிலும் இதனை எதிர்க்கும் உறுதியான மாநிலமாக திகழ்கிறது….

மேலும்...