டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஜாஃபருல் இஸ்லாம் வீட்டில் போலீசார் திடீர் சோதனை!

புதுடெல்லி (07 மே 2020): டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஜாஃபருல் இஸ்லாம் கான் வீட்டில் டெல்லி போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சமீபத்தில் அரபுலகின் சமூக ஆர்வலர்கள் சிலர் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் அடக்குமுறைகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இது இந்திய அரசியலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் அரபு நாடுகளில் இஸ்லாமிற்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் பாய்ந்து வருகிறது. இந்நிலையில் இந்நிகழ்விற்கு ஆதரவாக ஜாஃபருல் இஸ்லாம் கான் சமூக…

மேலும்...

டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஜபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு!

புதுடெல்லி (03 மே 2020): டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஜபருல் இஸ்லாம் கான் மீது டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவு தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளது. ஜபருல் இஸ்லாம் கான் சமூக வலைதளத்தில் பதிந்த பதிவு மத உணர்வுகளை தூண்டுவதாக அமைந்ததாகக் கூறி வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஜபருல் இஸ்லாம் கான் மீது போலீசில் புகார் அளித்தார். அதில் இரு சமூத்தினரின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில், பகைமை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு ஒரு…

மேலும்...

கன்னையா குமார், உமர் காலித் உள்ளிட்டோர் மீது தேச துரோக வழக்கு – கெஜ்ரிவால் அரசு அனுமதி!

புதுடெல்லி (29 பிப் 2020): ஜேஎன்யூ முன்னாள் மாணவ தலைவர் கண்ணையா குமார் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய டெல்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2016 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜேஎன்யு., வில் நடந்த போராட்டத்தின் போது தேசத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கன்னையா குமார் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்ய டெல்லி அரசுக்கு போலீஸ் தரப்பு டெல்லி அரசுக்கு அனுமதி கோரியிருந்தது. இதனை ஏற்று கொண்ட டில்லி…

மேலும்...

ஆண்டுவிழா நாடகம் போட்ட பள்ளிக்கூடம் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது!

பெங்களூரு (29 ஜன 2020): பள்ளி ஆண்டு விழாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நகைச்சுவை நாடகம் போட்ட பள்ளி நிர்வாகம் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள ஷஹீன் பள்ளியில் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற ஆண்டுவிழாவின் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சியாக 4 ஆம் வகுப்பு மாணவர்கள் நகைச்சுவை நாடகம் ஒன்றை அரங்கேற்றினர். அந்த நாடகத்தில் குடியுரிமை சட்டத்தை விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் அரசின் சட்டத்தை அவமதிக்கும் விதமாக இருப்பதாக…

மேலும்...

ஜே.என்.யூ மாணவர் ஷார்ஜில் இமாம் கைது!

பாட்னா (28 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஜே.என்.யு மாணவர் ஷர்ஜில் இமாம் கைது செய்யப்பட்டுள்ளார். வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவிலிருந்து பிரித்துவிடலாம் என்று பேசியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஷர்ஜில் இமாம் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் உபி.யில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக உத்தரபிரதேச போலீசாரும் இவர் மீது வழக்கு…

மேலும்...