பாட்னா (28 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஜே.என்.யு மாணவர் ஷர்ஜில் இமாம் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவிலிருந்து பிரித்துவிடலாம் என்று பேசியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஷர்ஜில் இமாம் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் உபி.யில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக உத்தரபிரதேச போலீசாரும் இவர் மீது வழக்கு ஒன்று பதிவு செய்துள்ளனர்.
இரு வழக்குகளிலும் ஷர்ஜில் இமாமை பீகாரின் ஜெகனாபாத் நகரில் அவரது சொந்த கிராமத்தில் கைது செய்யப்பட்டார்.