கத்தாரில் களை கட்டும் பேரீத்தம்பழத் திருவிழா!

தோஹா, கத்தார் (28 ஜூலை 2024) :  தோஹாவில் பிரபல சுற்றுலா தளமான சூக் வாகிஃப் (Souq Waqif ) இல், கடந்த ஜூலை 23 ஆம் தேதி பேரித்தம்பழத் திருவிழா கோலாகலமாகத் துவங்கியது.  திருவிழாவில் பங்கு பெறும் பேரீத்தம் பழங்கள் அனைத்தும் கத்தார் நாட்டில் விளைந்த பேரீத்தம் பழங்களாகும். துவங்கிய நான்கு நாட்களில் 81,492 கிலோகிராம் பேரிச்சம்பழங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.  இந்த அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளமான X இல்…

மேலும்...
கத்தாரில் அறிமுகமாகிறது பறக்கும் டாக்ஸி!

பறக்கும் டாக்ஸி கத்தாரில் அறிமுகம்!

தோஹா, கத்தார் (19 மே, 2024): பேட்டரியில் இயங்கும் பறக்கும் டாக்ஸி-களின் சேவை, கத்தார் நாட்டில்  விரைவில் துவங்க உள்ளது. அதன் முன்னோட்டமாக, அடுத்த ஆறு மாதங்களுள், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டாக்ஸிகள் பறக்கத் துவங்கும் என போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் நிகழும் சுற்றுச்சூழல் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு பல்வேறு உத்திகளை நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது கத்தார். கத்தாரில் ஏற்கனவே பெட்ரோல் டீஸலில் இயங்கும் கனரக வாகனங்கள் நீக்கப்பட்டுள்ளன. நாட்டில்  75…

மேலும்...
ஆன்லைன் மோசடியைத் தடுக்க கத்தாரில் "ஹிம்யான்" கார்டு அறிமுகம்!

ஆன்லைன் மோசடியைத் தடுக்க கத்தாரில் “ஹிம்யான்” கார்டு அறிமுகம்!

தோஹா, கத்தார் (08 ஏப்ரல் 2024) : கத்தார் அரசின் மத்திய வங்கியான Qatar Central Bank  (Himyan) ஹிமியான் ப்ரீபெய்ட் கார்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கத்தார் நாட்டில் ஆன்லைன் மூலம் நடக்கும் பணப் பரிவர்த்தனைகளில் மோசடி நடப்பதைத்  தடுக்கவும், Mastercard & Visa போன்ற ஜாம்பவான்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடவும் இந்த புதிய தொழில் நுட்பத்தை கத்தார் நாடு அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹிம்யான் கார்டு முழுக்க…

மேலும்...
பிச்சை எடுத்தால் சிறைத் தண்டனை - கத்தார்

பிச்சை எடுத்தால் சிறைத் தண்டனை – கத்தார்

தோஹா, கத்தார் (15 மார்ச் 2024): கத்தார் நாட்டில் எவராவது பிச்சை எடுப்பதைக் கண்டால் உடனடியாக பொதுமக்கள் புகார் அளிக்குமாறு கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகம் (MoI) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கத்தார் நாட்டில் பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றமாகும். கத்தாரில் வசிக்கும் அடித்தட்டு மக்கள் உட்பட அனைவருக்கும் அடிப்படை வாழ்க்கைக்கான தேவைகள் அனைத்தும் உரிய முறையில் கிடைத்திட கத்தார் அரசு வழி செய்துள்ளது. இருப்பினும், கத்தாருக்கு வருகை தரும் வெளிநாட்டினர் சிலர் பிச்சைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்….

மேலும்...
கத்தாரில் பெண்களுக்கான பிரத்யேக பள்ளிவாசல் துவக்கம்!

கத்தாரில் பெண்களுக்கான பிரத்யேக பள்ளிவாசல் துவக்கம்!

தோஹா, கத்தார் (01 பிப்ரவரி 2024):  கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில், பெண்களுக்கான பிரத்யேக பள்ளிவாசல் ஒன்று எதிர்வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. அல் முஜாதிலாஹ் (Al-Mujadilah) எனும் அறக்கட்டளை மூலம் இந்த பெண்களுக்கான பிரத்யேக பள்ளிவாசல் இயங்கும். இதற்காக நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியின் வரவேற்புரையை கத்தார் நாட்டின் ராணி ஷேகா மோஸா பின்த் நாசர் நிகழ்த்தி, பின் வருமாறு உரையாற்றினார். (இந்நேரம்.காம்) “பெண்களுக்கான இந்த பிரத்யேக பள்ளிவாசலில் தொழுகை, வணக்க வழிபாடுகள்…

மேலும்...
கத்தார் சாலையில் ஸ்டண்ட் செய்த கார் நசுக்கி அழிப்பு! (வீடியோ)

கத்தார் சாலையில் ஸ்டண்ட் செய்த கார் நசுக்கி அழிப்பு! (வீடியோ)

தோஹா, கத்தார் (22 ஜனவரி 2024): தோஹா நகரின் சாலைகளில், ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த கார் ஒன்று காவல்துறையினரால் கைப்பற்றி நசுக்கி அழிக்கப்பட்டது. கத்தார் நகர சாலைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் “லேண்ட் க்ரூஸர்” கார் டிரைவர் ஒருவர் சாகசங்களைச் செய்தார். இதனை சிலர் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். பின்பு இந்த வீடியோ பல்வேறு சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வந்ததை அடுத்து, காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். விசாரணையைத் தொடர்ந்து, ஸ்டண்ட் செய்த கார்…

மேலும்...
ஆன்லைன் சூதாட்டம் நடத்தியதில் கைது!

ஆன்லைன் சூதாட்டம், மது – கத்தாரில் பலர் கைது! (வீடியோ)

தோஹா, கத்தார் (10 டிசம்பர் 2023): கத்தார் நாட்டின் தலைநகரான தோஹா-வில், ஆன்லைன் சூதாட்டம், மது, மற்றும் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட நபர்களை இரவோடு இரவாகக் கைது செய்துள்ளனர் காவல்துறையினர். தோஹாவில் சில இடங்களில் ஆன்லைன் சூதாட்டங்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி), நேற்று நள்ளிரவில் திடீர் சோதனைகள் நடத்தியது. அதிரடி சோதனை இச் சோதனையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஆண்களும்…

மேலும்...

பிரமிக்க வைக்கும் கல்ஃப் ரயில்வே – முழுமையான தகவல்கள்!

தோஹா (05 டிசம்பர் 2023): வளைகுடா நாடுகளுக்கான Gulf Co-operation Council இன் 44வது அமர்வு இன்று தோஹாவில் நடைபெறுகிறது. இந்த அமர்வில், வளைகுடா நாடுகளை வலுப்படுத்தும் திட்டங்கள் அலசப்படுகின்றன. வளைகுடா நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒருங்கிணைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின்றன. இந்த ஒப்பந்தங்களில் முக்கியமாகக் கருதப்படுவது, வளைகுடா-வின் ஆறு நாடுகளை ஒன்றிணைக்கும் அதிவேக ரயில்வே திட்டமாகும். இதற்கு கல்ஃப் ரயில்வே (Gulf Railway) எனப் பெயரிடப் பட்டுள்ளது. அதிவேக ரயில் திட்டம் –…

மேலும்...

கத்தாரில் நடைபெறும் ராட்சதப் பலூன் திருவிழா!

தோஹா (03 டிசம்பர் 2023): கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் ராட்சதப் பலூன் திருவிழா நடைபெறுகிறது. ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்த திருவிழா சமயத்தில், நகரங்கள் முழுக்க பல்வேறு வடிவங்களினால் ஆன பலூன்கள் வானில் பறப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். எதிர்வரும் டிசம்பர் 7-ஆம் தேதி துவங்கும் இந்த பலூன் திருவிழா, கத்தார் நாட்டின் தேசிய நாளான டிசம்பர் 18, 2023 வரை நடைபெறும். தோஹாவில் உள்ள கட்டாரா (Katara) பகுதியில் இந்தத் திருவிழா நடைபெறும். திருவிழாவின் சிறப்பு…

மேலும்...

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில் உள்ள லுலு எக்ஸ்பிரஸ்ஸின் பின்புறம் உள்ள பல மாடி கட்டிடம் அருகில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தின் மேல் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இடிபாடுகளில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டனர். இந்த தகவலை கத்தார் சிவில் டிஃபென்ஸ்…

மேலும்...