கத்தாரில் களை கட்டும் பேரீத்தம்பழத் திருவிழா!

Share this News:

தோஹா, கத்தார் (28 ஜூலை 2024) :  தோஹாவில் பிரபல சுற்றுலா தளமான சூக் வாகிஃப் (Souq Waqif ) இல், கடந்த ஜூலை 23 ஆம் தேதி பேரித்தம்பழத் திருவிழா கோலாகலமாகத் துவங்கியது.  திருவிழாவில் பங்கு பெறும் பேரீத்தம் பழங்கள் அனைத்தும் கத்தார் நாட்டில் விளைந்த பேரீத்தம் பழங்களாகும்.

துவங்கிய நான்கு நாட்களில் 81,492 கிலோகிராம் பேரிச்சம்பழங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.  இந்த அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளமான X இல் Souq Waqif அறிவித்துள்ளது.

நடைபெறும் நாட்கள்:

ஜூலை 23 முதல் எதிர்வரும் ஆகஸ்ட் 3, 2024 வரை நடக்கும் இந்த 12 நாள் திருவிழாவானது, தினமும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இரவு 10 மணி வரை நடைபெறும்.

இந்நிகழ்வு Souq Waqif இன் கிழக்கு முற்றத்தில் நடைபெறுகிறது. இந்நேரம்.காம்

இந்த ஆண்டு பேரீத்தம்பழத் திருவிழாவில், கலாஸ் (Khalas) , ஷிஷி (Shishi), சுக்காரி (Sukkari), குனைசி (Khunaizi), பர்ஹி (Barhi), நாப்ட் சைஃப் (Nabut Saif), லுலு மற்றும் ரசிஸ் உள்ளிட்ட பல்வேறு புதிய உள்ளூர் தேதிகளைக் காட்டுகிறது.

கலாஸ் (Khalas) எனும் வகையான பேரீத்தம்பழம் மிகவும் பிரபலமான வகையாகும்.  அதைத் தொடர்ந்து ஷிஷி மற்றும் குனைசி வகை பழங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு திருவிழாவில், கத்தாரில் உள்ள 110 பண்ணைகளில் இருந்து விளைந்த பேரீத்தம் பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

கூடுதலாக, இந்த திருவிழாவில் பாதாம் மற்றும் அத்திப்பழம் போன்ற பருவகால பழங்களும் இடம் பெற்று வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

  • இந்நேரம்.காம்

Share this News: