இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

சுமத்ரா (03 ஆக 2021): இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் தெற்கே சுமத்ராவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள மென்டவாய் தீவு அருகே சுங்கா பெனு நகரின் தென்மேற்கே 191 கி.மீ. தொலைவில் 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்...

குவைத்தில் திடீர் நிலநடுக்கம்!

குவைத் (02 ஆக 2021): வளைகுடா நாடான குவைத்தில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. குவைத்தின் மனகிஷ்(Al-Manaqeesh) பகுதியில் திங்கள் கிழமை காலை 11:31 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில், 4.5 ஆக பதிவாகியுள்ளது. குவைத் அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் நில அதிர்வு கண்காணிப்பு பிரிவின் மேற்பார்வையாளர் அப்துல்லா அல் அன்சி கூறுகையில், உள்ளூர் நேரப்படி காலை 11:31 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கம் மனகிஷ் பகுதியின் தரைமட்டத்திலிருந்து 8 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும்,…

மேலும்...

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

அலாஸ்கா (29 ஜூலை 2021): அமெரிக்காவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வகத்தின் முதற்கட்ட தகவல்களின்படி, அலாஸ்காவின் சில பகுதிகள் கடற்கரையில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலாஸ்காவின் பெர்ரிவில்லுக்கு தென்கிழக்கில் 56 மைல் (91 கிலோமீட்டர்) தொலைவில் , உள்ளூர் நேரம் இரவு 10:15 மணியளவில் இந்த நிலநடுக்கம்…

மேலும்...

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!

டோக்கியோ (20 மார்ச் 2021): ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டள்ளது. மேலும் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் மியாகி மண்டலத்திற்கு அருகே உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி 9 நிமிடத்துக்கு 6.9 என்கிற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலப்பகுதியை ஒட்டிப் பசிபிக் பெருங்கடலின் கீழ் 73 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மனியைச் சேர்ந்த புவியியல் ஆய்வுத்துறை முதல் தகவலாக தெரிவித்தது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 7.0 ஆக…

மேலும்...

தஜிகிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம்!

தஜிகிஸ்தான்(12/02/2021): ஜம்மு – காஷ்மீர் அருகில் தஜிகிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் பல வட இந்திய மாநிலங்களில் உணரப்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.3 அளவு பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஜம்மு – காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேஷ், பஞ்சாப், டெல்லி முதலான மாநிலங்களில் உணரப்பட்டுள்ளது. பல பகுதிகளில் வீட்டு சுவர்களில் கீறல் விழுந்தது. வீட்டிலிருந்து மக்கள் அலறியடித்து வெளியே ஓடியுள்ளனர். பாதிப்புகள் ஏதும் இதுவரை பதிவாகவில்லை. நிலநடுக்கத்தின் மையப்புள்ளியான தஜிகிஸ்தானிலும் அதன் அண்மை…

மேலும்...

துருக்கியை நிலைகுலையச்செய்த நிலநடுக்கம்!

இஸ்தான்பூல் (31 அக் 220): துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 என பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்பு சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது. இங்கு 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து முற்றிலும் சேதடைந்தன. கட்டிட இடிபாடுகளுக்குள் பலர்…

மேலும்...

மிசோரத்தில் திடீர் நிலநடுக்கம்!

புதுடெல்லி(12 ஜூலை 2020): மிசோரம் மாநிலத்தில் மதியம் 2.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்தன. மிசோரம் மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சாம்பாய் மாவட்டத்தில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. நண்பகல் 2.28 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் கட்டடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு…

மேலும்...

மணிப்பூர் மற்றும் மேகாலயாவில் நிலநடுக்கம்!

மணிப்பூர் (28 ஜூன் 2020): மணிப்பூர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் டிக்லிபூரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.1 அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. முன்னதாக ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஹான்லே நகரில் இருந்து வடகிழக்கே 332 கி.மீ. தொலைவில் நேற்று மதியம் 12.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.4 ஆக பதிவானது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. மேலும் . லடாக்கின் கார்கில் பகுதியில் இருந்து வடமேற்கே…

மேலும்...

BREAKING: கர்நாடகாவில் நிலநடுக்கம்!

பெங்களூரு (05 ஜூன் 2020): கர்நாடகா மற்றும் ஜார்கண்டில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை லேசான தீவிரம் கொண்ட நிலநடுக்கம் கர்நாடகாவில் ஹம்பி மற்றும் ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் தாக்கியதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூரில் காலை 6:55 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.7 என்ற லேசான தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே நேரத்தில், கர்நாடகாவில் உள்ள ஹம்பியும் ரிக்டர் அளவுகோலில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை…

மேலும்...

BREAKING NEWS :துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இஸ்தான்பூல் (25 ஜன 2020): துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியின் மேற்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை இரவு 08:55 ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஈரான் லெபனான் மற்றும் சிரியாவிலும் உணரப்பட்டுள்ளது.

மேலும்...