பெங்களூரு (05 ஜூன் 2020): கர்நாடகா மற்றும் ஜார்கண்டில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை லேசான தீவிரம் கொண்ட நிலநடுக்கம் கர்நாடகாவில் ஹம்பி மற்றும் ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் தாக்கியதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூரில் காலை 6:55 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.7 என்ற லேசான தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதே நேரத்தில், கர்நாடகாவில் உள்ள ஹம்பியும் ரிக்டர் அளவுகோலில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை சந்தித்ததாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்காத்தால் எந்தவொரு உயிரிழப்பும் அல்லது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படவில்லை.