தஜிகிஸ்தான்(12/02/2021): ஜம்மு – காஷ்மீர் அருகில் தஜிகிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் பல வட இந்திய மாநிலங்களில் உணரப்பட்டது.
ரிக்டர் அளவு கோலில் 6.3 அளவு பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஜம்மு – காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேஷ், பஞ்சாப், டெல்லி முதலான மாநிலங்களில் உணரப்பட்டுள்ளது. பல பகுதிகளில் வீட்டு சுவர்களில் கீறல் விழுந்தது. வீட்டிலிருந்து மக்கள் அலறியடித்து வெளியே ஓடியுள்ளனர். பாதிப்புகள் ஏதும் இதுவரை பதிவாகவில்லை.
நிலநடுக்கத்தின் மையப்புள்ளியான தஜிகிஸ்தானிலும் அதன் அண்மை பிரதேசங்களிலும் பாதிப்பு அதிகமிருக்கும் எனத் தெரிகிறது.