தெலுங்கானாவில் ஏற்பட்ட விமான விபத்தில் தமிழக பெண் விமானி பலி!

குண்டூர் (26 பிப் 2022): தெலுங்கானாவில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் பெண் விமானி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவின் குண்டூர் பகுதியிலிருந்து தெலுங்கானாவின் நல்கொண்டா பகுதிக்கு சென்றுகொண்டிருந்த பயிற்சி விமானம் ஒன்று எதிர்பாராத விதமாக தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் விமானி மகிமா உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும்...

திண்டுக்கல்லில் திடீர் துப்பாக்கிச் சூட்டில் வாலிபர் பலி!

திண்டுக்கல் (03 ஜன 2022): திண்டுக்கல்லில் வாலிபர்கள் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென ஒருவர் மீது துப்பாகிச் சூடு நடத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் மரியநாதபுரம் செட்டிகுளத்தை மீன் குத்தகை எடுத்து உள்ளார். இவருடைய மகன் ராகேஷ் குமார்(26) . இவர் நேற்று இரவு 1.30 மணி அளவில் செட்டிகுளம் அருகே நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் அவரை சுட்டனர்.‌…

மேலும்...

வட இந்தியாவில் இடி மின்னல் தாக்கி 68 பேர் பலி!

லக்னோ (12 ஜூலை 2021): வட இந்தியாவில் பெய்துவரும் பலத்த மழையாலும் மின்னல் தாக்கியதில் 68 பேர் இறந்துள்ளனர். வட இந்தியாவில் இடியுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. இதில் மின்னல் தாக்கியதில் உத்தரபிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளன. குறைந்தது 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 20 பேரும், மத்திய பிரதேசத்தில் ஏழு பேரும் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் பலியானவர்களில் 7 பேர் குழந்தைகள். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். கான்பூர் தேஹத் மற்றும் ஃபதேபூரில் ஐந்து…

மேலும்...

கேரள நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வு!

திருவனந்தபுரம் (18 ஆக 2020): கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் பெய்த கனமழையின் காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 20 வீடுகள் நிலச்சரிவில் முழுவதும் சேதமானது. இந்த நிலச்சரிவில் 80 பேர் சிக்கிய நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. பத்து நாட்களைக் கடந்தும் இன்னும் மீட்புப்பணி நடைபெற்றுவரும் நிலையில், தினமும் மண்ணில் புதையுண்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் அப்பகுதியில்…

மேலும்...

பீகாரில் மின்னல் தாக்கியதில் 83 பேர் பலி!

பாட்னா (25 ஜூன் 2020): பீகாரில் மின்னல் தாக்கியதில் 83 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பீகார் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் பீகாரின் பல பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 83 பேர் பலியாகியுள்ளனர். கோபால்கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 13 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் நவாடா மாவட்டத்தில் 8 பேரும், சிவான் மற்றும் பாகல்பூர் மாவட்டத்தில் தலா 6 பேரும்,தர்பங்கா,…

மேலும்...

ஜார்கண்டில் மீண்டும் கொடூரம் – கும்பல் தாக்குதலில் ஒருவர் பலி!

டம்கா (13 மே 2020): ஜார்கண்ட் கிராமத்தில் இரண்டு இளைஞர்கள் கயிறுகளால் கட்டப்பட்டு மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்க, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுபஹான் அன்சாரி,(26). அவரது நண்பர் துலால் மிர்தா(22) ஆகியோர் ஆடு திருடியதாகக் கூறி இருவரையும் கிராமத்திற்குள் இழுத்துச் சென்று ஒரு மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் சுபஹான் பரிதாபமாக உயிரிழந்தார்.துலால் மிர்தா சிகிச்சைக்காக மருத்துவமனையில்…

மேலும்...

ஆந்திராவில் பயங்கரம் – சுருண்டு விழுந்த மக்கள்- 5000 த்திற்கும் அதிகமானோர் பாதிப்பு: வீடியோ

விசாகப்பட்டினம் (07 மே 2020): ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பாலிமர் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயும் கசிவால் 5000த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் பலியாகியுள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் பிரபலமான எல்ஜி பாலிமர் ரசாயன தொழிற்சாலை, 1961ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. இங்கு பாலிமர் ரசாயன பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்துஸ்தான் பாலிமர் நிறுவனமும், Mc Dowell & Company Limited ம் இணைந்து இந்த ஆலையை இயக்கி வருகிறது….

மேலும்...

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தமிழக வீரர் உட்பட மூவர் பலி!

ஸ்ரீநகர் (05 மே 2020): வடக்கு காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அஸ்வானி குமார் யாதவ், 31, சி.சந்திரசேகர், 31, சந்தோஷ்குமார் மிஸ்ரா,35 என உயிர் நீத்த மூவரும் சிஆர்பிஎப் -ன் 92 பட்டாலியனைச் சேர்ந்தவர்கள். . இதில்,சி.சந்திரசேகர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே இருக்கும் மூன்றுவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். சந்திரசேகரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளன ….

மேலும்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 6 பேர் பலி!

விருதுநகர் (20 மார்ச் 2020): விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தின் காரணமாக 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது சிப்பி பாறை . இங்கு தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது உராய்வின் காரணமா பட்டாசு விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது இந்த விபத்தில்…

மேலும்...

வீண் விளையாட்டு விபரீதமானது – நான்கு இளைஞர்கள் பரிதாப பலி!

ராணிப்பேட்டை (15 மார்ச் 2020): ராணிப்பேட்டை அருகே லோடு வேன் ஓட்டும் போது ரேஸ் போக நினைத்து வேன் கட்டுப்பாட்டை இழந்ததால் நான்கு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள ஆஜிப்பேட்டை பகுதியை சேர்ந்த 8 இளைஞர்கள் இரவு நேரத்தில் லோடு வேனில் விளையாட்டாக ரேஸ் செல்ல முயன்றுள்ளனர். அதிவேகமாக சென்ற மினி வேன் ஆஜிப்பேட்டை வலைவு சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே இருந்த சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளனது….

மேலும்...