பாரத் ஜோடோ யாத்திரை இன்று மீண்டும் தொடங்குகிறது!
புதுடெல்லி (03 ஜன 2023): ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை இன்று மீண்டும் தொடங்குகிறது. பயணத்தின் இரண்டாவது கட்டம் டெல்லியில் உள்ள காஷ்மீரி கேட்டில் இருந்து காலையில் தொடங்கும். இந்த யாத்திரை யாத்திரை இன்று உத்தரபிரதேசத்திற்குள் நுழைகிறது. ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரையிலான 3122 கி.மீ பயணம் முடிவடைந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்குகிறது. இன்று முதல் வரும் 5ம் தேதி வரை உத்தரபிரதேசத்தில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொள்கிறார்….