இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்காக பெருமை கொள்வோம்!

புதுடெல்லி (06 ஆக 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் வெற்றி பெற முடியாவிட்டாலும், இந்திய பெண்கள் பெருமையுடன் ஹாக்கி மைதானத்தை விட்டு வெளியேறுகிறார்கள். டோக்கியோ ஒலிம்பிக்கில் அரையிறுதி வரை சென்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணி, வெண்கலப் பதக்கப் போட்டியில், பிரிட்டனிடம் 4-3 என்ற கணக்கில் தோற்றனர். அரையிறுதி வரை சென்ற இந்திய ஹாக்கி பெண்கள் அணிக்கு இந்தியர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய பிரதமர் மோடியும் ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். We will…

மேலும்...

செய்ய வேண்டியதை விட்டு கை தட்டுவதும் விளக்கேற்றுவதும் சரியா? – ராகுல் காந்தி விளாசல்!

புதுடெல்லி (04 ஏப் 2020): போதிய பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் மக்களைக் கை தட்ட வைப்பதும், விளக்கேற்ற வைப்பதும் கரோனா பிரச்னைக்குத் தீர்வைத் தராது என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “கரோனா வைரஸ் நோய்த் தொற்றை எதிர்கொள்ளும் போராட்டத்தில் இந்தியா போதிய அளவுக்குப் பரிசோதனைகளை மேற்கொள்வதில்லை. மக்களைக் கை தட்டவைப்பதும், வானத்தை நோக்கி ஒளி எழுப்பச் செய்வதும் பிரச்னையைத் தீர்க்காது” என்றார். இந்தியாவில் பத்து லட்சத்தில் 29…

மேலும்...

பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் யோசனை!

சென்னை (15 ஜன 2020): பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் யோசனை வழங்கியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், ட்விட்டரில் சிஏஏ தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அவர், “பிரதமர் மோடி, சிஏஏ குடியுரிமை வழங்குவதற்குத்தான், குடியுரிமையைப் பறிப்பதற்கு அல்ல என்கிறார். எங்களில் பலபேர், சிஏஏ பல மக்களின் குடியுரிமையை எடுத்துவிடும் என எண்ணுகிறோம். மோடி உயர்வான இடங்களில் இருந்துகொண்டு அமைதியான, கேள்வி கேட்க முடியாத மக்களிடம் பேசுகிறார். நாங்கள் ஊடகத்தின் வழி பேசுகிறோம்….

மேலும்...

தமிழகம் செய்ததை பின்பற்றிய மேற்கு வங்கத்தினர்!

சென்னை (11 ஜன 2020): கோபேக் மோடி தமிழகத்தில்தான் பிரபலம். ஆனால் இபோது மோடி செல்லும் பல மாநிலங்களிலும் பிரபலம். பிரதமர் மோடி இருநாள் பயணமாக மேற்கு வங்காளம் மாநில தலைநகரம் கொல்கத்தாவுக்கு இன்று மாலை வருகை தந்தார். அவர் கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவுக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம்…

மேலும்...

எங்கே நிதியமைச்சர்? – சர்ச்சையாகும் மோடியின் நிதி தொடர்பான கூட்டம்

புதுடெல்லி (09 ஜன 2020): நிதி தொடர்பாக ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளாதது விவாத பொருளாகியுள்ளது. இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தலைமையில் இன்று (வியாழக்கிழமை) பொருளாதார வல்லுனர்களுடன் இரண்டு மணி நேர சந்திப்பு நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) பங்கேற்கவில்லை. அது ட்விட்டரில் பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.

மேலும்...