எங்கே நிதியமைச்சர்? – சர்ச்சையாகும் மோடியின் நிதி தொடர்பான கூட்டம்

Share this News:

புதுடெல்லி (09 ஜன 2020): நிதி தொடர்பாக ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளாதது விவாத பொருளாகியுள்ளது.

இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தலைமையில் இன்று (வியாழக்கிழமை) பொருளாதார வல்லுனர்களுடன் இரண்டு மணி நேர சந்திப்பு நடைபெற்றது.

ஆனால் இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) பங்கேற்கவில்லை. அது ட்விட்டரில் பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.


Share this News:

Leave a Reply