பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கல் – அதிரையில் நகராட்சித் தலைவர் தொடங்கி வைப்பு!

தஞ்சாவூர் (09 ஜன 2023): தமிழ்நாட்டில் எங்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டம் அந்தந்த பிரதிநிதிகளால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுறை வழிகாட்டல்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செக்கடி மோட்டில் உள்ள ரேஷன் கடையில் நகராட்சி தலைவர் தாஹிரா அம்மாள் சார்பில் எம்.எம்.எஸ் அப்துல் கரீம் தொடங்கி வைத்தார். அவருடன் நகராட்சி துணைத்தலைவர் இராம.குணசேகரன், வார்டு கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். வந்திருந்த பிரதிநிதிகளுக்கு 7 வது வார்டு செயலர் மரைக்கா…

மேலும்...

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன் இன்று முதல் விநியோகம்!

சென்னை (03 ஜன 2023): ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கான பரிசு தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். அதன்படி, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகியவை வழங்கப்பட உள்ளன. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 9-ந் தேதியில் இருந்து வழங்கப்பட…

மேலும்...

கூடுதலாக ஒரு பொங்கல் பரிசு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை (28 டிச 2022): பொங்கல் பரிசாக கரும்பும் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 22-ந்தேதி அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், பொங்கல் பண்டிகைக்கு கரும்பை அரசு கொள்முதல் செய்யும் என்று நம்பி பயிரிட்டதாக விவசாயிகள் தெரிவித்து வந்தனர். சென்னை…

மேலும்...

பொங்கல் பரிசு டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம்!

சென்னை (26 டிச 2022): பொங்கல் ரொக்கப் பணம் வழங்கும் நிகழ்ச்சியினை ஜனவரி 2ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். அதைதொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பினை பொது மக்களுக்கு வழங்க உள்ளனர். இதற்கிடையில், பரிசுப்பொருட்களை பெறுவதற்கான டோக்கனை, ரேஷன் கடை ஊழியர்களே வரும் 27ம் தேதி முதல் 28ம் தேதி வரை பயனாளர்களின் வீடுகளுக்கே சென்று விநியோகிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் யாராவது ஒருவரின் கைரேகைப் பதிவு செய்தால்…

மேலும்...

ரூ 1000 பத்தாது ரூ 5000 வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி!

சென்னை (23 டிச 2022): பொங்கல் பரிசு ரூ 5000 வழங்க வேண்டும் என்று எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 பரிசுத் தொகை மற்றும் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் “தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்காதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும், பொங்கல் பரிசு தொகையை ரூ.5,000 ஆக…

மேலும்...

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

சென்னை (22 டிச 2022): 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 2023ஆம் ஆண்டு தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட,அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச்…

மேலும்...

பொங்கல் பரிசு – ரொக்கமாக வழங்க தமிழக அரசு முடிவு!

சென்னை (09 நவ 2022): தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. 2022ம் ஆண்டு சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்த இந்த திட்டத்தை அனைத்து நியாயவிலைக் கடைகளின் வாயிலாக, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயல்படுத்தியது. அதன்படி, 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், இதில் அதிக குளறுபடி நடந்ததாக எதிர்க்கட்சியினரும்,…

மேலும்...