பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கல் – அதிரையில் நகராட்சித் தலைவர் தொடங்கி வைப்பு!

Share this News:

தஞ்சாவூர் (09 ஜன 2023): தமிழ்நாட்டில் எங்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டம் அந்தந்த பிரதிநிதிகளால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுறை வழிகாட்டல்படி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செக்கடி மோட்டில் உள்ள ரேஷன் கடையில் நகராட்சி தலைவர் தாஹிரா அம்மாள் சார்பில் எம்.எம்.எஸ் அப்துல் கரீம் தொடங்கி வைத்தார். அவருடன் நகராட்சி துணைத்தலைவர் இராம.குணசேகரன், வார்டு கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

வந்திருந்த பிரதிநிதிகளுக்கு 7 வது வார்டு செயலர் மரைக்கா இத்ரீஸ், சால்வை போர்த்தி கவுரவித்தார்.

முன்னதாக இந்த திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தீவுத்திடல் அன்னை சத்யா நகர் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இலவச வேட்டி, சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ரூ.1000-த்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


Share this News:

Leave a Reply