குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு!
இஸ்லாமாபாத் (07 பிப் 2020): பாகிஸ்தானில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்குத் தண்டனை விதிக்கும் தீர்மானம் பாக். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அலி முஹம்மத் கான் இந்தத் தீர்மானத்தை தாக்கல் செய்தார். பாகிஸ்தான் மக்கள் கட்சியைத் தவிர்த்து ஏனைய உறுப்பினர்களின் ஆதரவோடு இந்தத் தீர்மானம் நிறைவேறியது. அதேவேளை இதற்கு எதிர்ப்பும் இருந்தது. இதுதொடர்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜா பர்வேஸ் அஷ்ரப் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘தணடனைகளை…