ரவுடிகளின் கூடாரமாகும் தஞ்சாவூர் – பீதியில் மக்கள்!

Share this News:

தஞ்சாவூர் (16 ஜன 2020): தஞ்சாவூரில் இருவர் கொல்லப் பட்ட நிலையில் கொலையாளிகள் இன்னும் இதுபோல சில சம்பவங்களைச் செய்தால்தான் தஞ்சாவூரில் நம்பர் ஒன்னாக இருப்போம்’ என கத்திக்கொண்டே சென்றதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்..

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வடக்கு வாசல். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர், சக்திவேல். கூலி வேலை செய்துவந்தார். இந்த நிலையில், சக்திவேலும் அவரது நண்பர் இரட்டைப் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த செபஸ்டியன் மற்றும் விளார் சாலை தில்லை நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர், நேற்று இரவு வடக்கு வாசல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பொங்கலைக் கொண்டாடும்விதத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், சூர்யா, வெங்கடேசன் ஆகியோரும் மது அருந்திக்கொண்டிருந்தனர். இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பார் ஊழியர்கள், இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்துள்ளனர். அங்கிருந்து நூறு அடி தூரம் சென்ற பிறகு, மீண்டும் மோதல் ஏற்பட்டது. சக்திவேல், செபஸ்டியன், சதீஷ்குமார் ஆகியோரை எதிர்த்தரப்பினர் அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த சக்திவேல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில், செபஸ்டியான் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து, சதீஷ்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக, வடக்கு வாசல் ஏவி பதி காலனியைச் சேர்ந்த செல்வகுமார், வெங்கடேசன், சூர்யா ஆகிய மூன்று பேரையும் மேற்கு காவல்நிலைய போலீஸார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். பொங்கல் தினத்தில் நடைபெற்ற இந்த கொலைச் சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து பீதியில் உள்ள மக்கள் முன்னர், அதிக அளவில் குற்றச் சம்பவங்கள் நடக்கும். பின்னர் காவல்துறையினர் எடுத்த நடவடிக்கையால் அவை குறைந்துவிட்டன. சில ஆண்டுகளாக மீண்டும் குற்றச் சம்பவங்கள் தலைதூக்கத் தொடங்கிவிட்டன. போலீஸின் மெத்தன நடவடிக்கையால் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துவிட்டதாக குமுறுகின்றனர்..


Share this News:

Leave a Reply