ஐலவ்யூ விஜய் – பாஜகவின் திடீர் பாசம்!
கோவை (13 பிப் 2020): நடிகர் விஜயை நான் தனிப்பட்ட முறையில் மிகவும் நேசிக்கிறேன் என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “கோவையில் 1998-ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. . கோவையில் காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட 21 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் குமரியில் கொலை செய்யப்பட்டுள்ளார்….