புதுடெல்லி (09 ஜன 2020): காமெடி பீசாக இருந்து கொண்டு கட்சி பெயரை கெடுக்கிறார்கள் என்று பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் எச் ராஜா மீது அமித் ஷா கடுங்கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி எச் ராஜா தலைமையில் சமீபத்தில் சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தியது பாஜக. இந்த போராட்டத்தில் சொற்ப ஆட்களே கலந்து கொண்டனர். இது பாஜக தலைமையை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா, பா.ஜ.க.வின் தேசிய செயல்தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட சீனியர்களோடு ஆலோசனையில் இருந்துள்ளார். இந்த நேரத்தில் ஏழெட்டு பேர் போராட்டம் நடத்திக் கைதாகி, நம்ம கட்சியையே காமெடியாக்கிட்டு இருக்கிறார்கள். அவர்களை வார்ன் பண்ணுங்கள் என்று கோபப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, பொன்னாரையும் ஹெச்.ராஜாவையும் தொடர்புகொண்ட நட்டா, ரொம்பவே கடிந்து கொண்டுள்ளார்.