டெல்லி வன்முறையும் உயிரிழப்புகளும் – ப.சிதம்பரம் பரபரப்பு கருத்து!
புதுடெல்லி (25 பிப் 2020): டெல்லி வன்முறையும் உயிரிழப்புகளும் அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிதம்பரம் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது ;- “ வன்முறைகளையும் உயிரிழப்புகளையும் தடுக்க வேண்டுமெனில் குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம் மக்களிடையே பிளவை உருவாக்கும் என ஏற்கனவே எச்சரித்தோம். குறுகிய பார்வை கொண்டோரை ஆட்சியில் அமர வைத்ததற்கான விலையை மக்கள் அளித்து வருகின்றனர்….