டெல்லி வன்முறையும் உயிரிழப்புகளும் – ப.சிதம்பரம் பரபரப்பு கருத்து!

Share this News:

புதுடெல்லி (25 பிப் 2020): டெல்லி வன்முறையும் உயிரிழப்புகளும் அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிதம்பரம் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது ;- “ வன்முறைகளையும் உயிரிழப்புகளையும் தடுக்க வேண்டுமெனில் குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

குடியுரிமை திருத்த சட்டம் மக்களிடையே பிளவை உருவாக்கும் என ஏற்கனவே எச்சரித்தோம். குறுகிய பார்வை கொண்டோரை ஆட்சியில் அமர வைத்ததற்கான விலையை மக்கள் அளித்து வருகின்றனர். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அரசு அறிவிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply