சேதமடைந்த மெரீனா மாற்றுத்திறனாளிகள் மரப்பாதை இன்று மீண்டும் திறப்பு!

சென்னை (16 டிச 2022): புயலால் சேதமான மெரீனா மாற்றுத் திறனாளிகள் மரப்பாதை மறு சீரமைக்கப்பட்டு இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் திறக்கப்படுகிறது. ரூ.1.14 கோடி செல்வில் அமைக்கப்பட்ட இந்த பாதை நவம்பர் 27ல் திறக்கப்பட்டது. இது சமீபத்தில் ஏற்பட்ட மாண்டோஸ் புயல் காரணமாக ஒரு பகுதி சேதமடைந்தது. இந்நிலையில் சீரமைப்புப் பணிக்காக மரப்பாதை வழி மூடப்பட்டு சீரமைப்பு பணி நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து இன்று இந்த மரப்பாதை மீண்டும் திறக்கப்படுகிறது.

மேலும்...

அடிக்குது புயல் – வெளுக்குது மழை!

சென்னை (09 டிச 2022): சென்னை அருகே 130 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது மாண்டஸ் புயல். மாண்டஸ் புயலால் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பல்லாவரம், ஆலந்தூர், எழும்பூர், கிண்டி, வாலாஜாபாத், மாம்பலம்,…

மேலும்...

தீவிரமடையும் மாண்டஸ் புயல்!

சென்னை (09 டிச 2022): மாண்டஸ் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவுக்கு பிறகு தீவிர புயலாக வலுப்பெற்றது. இது இன்று காலை வரை தீவிர புயலாக இருந்து, பின்னர் மீண்டும் புயலாக வலுவிழந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நெருங்கும். இதனை தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது…

மேலும்...

தீவிரமாக மாறும் மாண்டஸ் புயல்!

சென்னை (08 டிச 2022): நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று இரவு புயலாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. இன்று காலை 0830 மணி நிலவரப்படி, காரைக்காலுக்கு 460 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கே மற்றும் சென்னைக்கு 550 கி.மீ. தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம்-புதுவை-தெற்கு ஆந்திரா கடற்கரையில், புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே 9ம் தேதி நள்ளிரவில் கரையை கடக்கக்கூடும்…

மேலும்...