சென்னை (09 டிச 2022): சென்னை அருகே 130 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது மாண்டஸ் புயல்.
மாண்டஸ் புயலால் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பல்லாவரம், ஆலந்தூர், எழும்பூர், கிண்டி, வாலாஜாபாத், மாம்பலம், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், தாம்பரம், வேளச்சேரி, மாதவரம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரியிலிருந்து கிழக்குக் கடற்கரை வழியாக செல்லும் பேருந்துகள் ஓடாது என அறிவிக்கப் பட்டுள்ளது.