4 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசி வீண் – அமைச்சர் தகவல்!
சென்னை (18 ஜூலை 2021): “அதிமுக ஆட்சியில், 4 லட்சத்து 34 ஆயிரத்து 838 டோஸ் தடுப்பூசிகள் வீணாக்கப் பட்டுள்ளன!” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மீனம்பாக்கத்தில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு இதுவரை ஒரு கோடியே 80 லட்சத்து 32 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளதாகத் தெரிவித்தார். திமுக அரசு பதவியேற்ற பிறகு நாளொன்றுக்கு சராசரியாக 1 லட்சத்து 61 ஆயிரத்து 297 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு…