ஆசை பட்டவர்களுக்கு பதவியில்லை – அதிருப்தியில் உடன்பிறப்புக்கள்!

திமுக முதன்மை செயலாளர் பதவி கே.என்.நேருக்கு வழங்கப்பட்டதால் திமுக மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். தலைமைக் கழக முதன்மைச் செயலாளராகப் பதவி வகித்து வரும் டி.ஆர்.பாலு, நாடாளுமன்றக் குழுத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருவதால் அவருக்குப் பதிலாகத் தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் சமாதிக்குச் சென்றவருடன் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேடப்பட்டி முத்தையா மகன் மணிமாறன், மதுரை மூர்த்தி உட்பட…

மேலும்...

டி.ஆர்.பாலு நீக்கம் – கே.என்.நேருக்கு பதவி!

சென்னை (26 ஜன 2020): திமுகவில் டி.ஆர்.பாலு வகித்து வந்த திமுக முதன்மை செயலாளர் பதவி கே.என்.நேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் டி.ஆர்.பாலு நாடாளுமன்றக் குழுத்தலைவராக பொறுப்பு வகிப்பதால், அவருக்கு பதிலாக அவர் வகித்து வந்த திமுக முதன்மை செயலாளர் பதவி கே.என்.நேருவுக்கு வழங்கப்ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கே.என்.நேருக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும்...