இளையராஜாவுக்கு யுவன் சங்கர் ராஜா பதிலடி?

சென்னை (18 ஏப் 2022): பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா பாராட்டியுள்ள நிலையில் அவரது மகன் யுவன் சங்கர் ராஜா இன்ஸ்ட்டாவில் இட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புளூ கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தின் ‘அம்பேத்கரும் மோடியும்’ என்கிற நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள இளையராஜா, மோடி ஆட்சியில் உலகத்தரமான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன; முத்தலாக் சட்டம் உள்ளிட்ட மோடி கொண்டு வந்த சட்ட திட்டங்கள் வாயிலாக, பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கண்டு அம்பேத்கரே…

மேலும்...

மாநாடு திரைப்படம் எப்படி? திரை விமர்சனம்!

3 ஆண்டுகள் தயாரிப்பில் இருந்து, படம் ரெடியாகியும் வருமா வராதா என பல தடைகளைத் தாண்டி வெளியாகியுள்ளது மாநாடு திரைப்படம். சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். முத்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் 12 வது மாநில மாநாடு நடக்கிறது. இதில் தமிழக முதல்வராக வரும் எஸ் ஏ சந்திரசேகர் அந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்….

மேலும்...

யுவன் சங்கர் ராஜா இசையில் ஒலிம்பிக் பாடல் – முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!

சென்னை (26 ஜூலை 2021): ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இயற்றி இசையமைத்த “வென்று வா வீரர்களே” என்ற பாடலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச்…

மேலும்...

சிலம்பரசன் குறித்து விரைவில் நல்ல தகவல் – யுவன் சங்கர் ராஜா தகவல்!

சென்னை (24 ஜூன் 2021): நடிகர் சிலம்பரசன் குறித்து விரைவில் நல்ல தகவல் வரும் என்பதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு சிலம்பரசன் மீண்டும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ஈஸ்வரனை அடுத்து ‘மாநாடு’ படம் விரைவில் வெளிவரவுள்ளது . இப்படத்தின் டீசர் நன்கு பேசப்பட்டது. இதனை அடுத்து வெளியான முதல் சிங்கிள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வெங்கட் பிரபு இயக்கம் மாநாடு படத்திற்கு யுவன் சங்கர் ராஜா…

மேலும்...

சிம்புவின் ‘மாநாடு’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் டீசர்

மாநாடு’. வெங்கட் பிரபுவின் அரசியல் அதிரடியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.   சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் ஆடியோ உரிமையை யுவன் சங்கர் ராஜாவின் யூ1 ரெக்கார்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான meherezylaa டீசர் இன்று வெளியாகியாகியுள்ளது.

மேலும்...

எனக்கும் அந்த அனுபவம் உண்டு – யுவன் சங்கர் ராஜா தகவல்!

சென்னை (10 அக் 2020): இந்தி தெரியாமல் விமான நிலையத்தில் நானும் அவமானப்படுத்தப்பட்டுள்ளேன் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து வார இதழ் ஒன்றிற்கு அளித்துள்ள நேர்காணலில் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளதாவது: “நான் போட்ட டீ ஷர்ட் இவ்ளோ வைரலாகும்னு நான் எதிர்பார்க்கல. சும்மா யதேச்சையா பண்ணுனதுதான். ஆனா அந்த டிஷர்ட்ல இருந்த ‘I am a tamil speaking Indian’ங்குற வார்த்தைகள் உண்மைதானே. அதுல எந்த மாற்றுக்கருத்தும் எனக்கு இப்பவும் இல்ல….

மேலும்...

இந்தி தெரியாது போடா – பரபரப்பை ஏற்படுத்தியுள்ள யுவனின் டி.சர்ட்!

சென்னை (05 செப் 2020): இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை விமான நிலையில் சிஐஎஸ்எப் அதிகாரி ஒருவர் திமுக எம்பி கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியரா என்று கேள்வி கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனை தமிழ் ஆர்வலர்கள் பலரும் கடுமையாக கண்டித்திருந்தனர். இந்நிலையில் இந்திக்கு எதிராக தமிழ் திரையுலகமும் களத்தில் இறங்கியுள்ளது. அதில் குறிப்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர்…

மேலும்...

இஸ்லாத்தில் எனக்கு பிடித்த விஷயங்கள் – யுவன் சங்கர் ராஜா அதிரடி பதில்!

சென்னை (31 மே 2020): “என்னிடம் இருக்கும் பல கேள்விகளுக்கு குர்ஆனில் பதில் கிடைத்தது” என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறிய யுவன் சங்கர் ராஜா 2016 ஆம் ஆண்டு ஷப்ருன் நிஷா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யுவனின் மனைவி ஷப்ருன் நிஷா இன்ஸ்டாகிராமில் பலரின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது சிலர்…

மேலும்...

யுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன்? யுவனின் மனைவி அதிரடி பதில்!

சென்னை (28 மே 2020): “யுவனை முஸ்லிமாக மாற்றி வீட்டீர்களே?” என்று சமூக ஊடகங்களில் சிலர் கேட்ட கேள்விக்கு யுவனின் மனைவி ஷப்ருன் நிஷா அதிரடியாக பதில் அளித்துள்ளார். இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இஸ்லாத்திற்கு மாறினார். அதனை தொடர்ந்து மூன்று வருடங்கள் கழித்து ஷப்ரூன் நிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஷப்ருன் நிஷா ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்….

மேலும்...