மழை காரணமாக சென்னையில் 4 விமானங்கள் ரத்து
சென்னை (10 நவ 2021):சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து கிளம்பும் மற்றும் சென்னைக்கு வரும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மதுரை, திருச்சி, மும்பை, ஷார்ஜா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது