குடியரசுத் தலைவரை அவமதித்த மோடி – வீடியோ இணையத்தில் வைரல்!
புதுடெல்லி (24 ஜூலை 2022): குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அவமதிக்கும் விதமாக பிரதமர் மோடி நடந்துகொண்ட விதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், இதற்கான பிரிவு உபசார நிகழ்வின் பொழுது மோடிக்கு, ராம்நாத் கனிவான வணக்கம் தெரிவித்தார். ஆனால் அதனை சட்டை செய்யாத பிரதமர் மோடி கேமராவை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.